Latestமலேசியா

பகாங் அரசு ஊழியர்களுக்கு ரிம. 600 பெருநாள் உதவி நிதி!

குவாந்தான்,மே. 18- பகாங் மாநிலத்தில் கிரேட் 54 மற்றும் அதற்கு கீழ் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதியாக 600 ரிங்கிட் வழங்கப்படும் என்று மாநில அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு 500 விருது வழங்கப்பட்டது. இம்முறை 100 ரிங்கிட் கூடுதலாக்கப்பட்டு 600 ரிங்கிட் ஆக அந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த உதவித் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் மாநில நிதி அலுவலகம் ஈடுபட்டிருக்கிறது. இம்மாதம் 24 ஆம் தேதிக்குள் உதவி நிதி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

மாநில அரசாங்கம் நிதி ரீதியாக சிறந்த நிலையில் இருக்கிறது என்பதையே இந்தச் சிறப்பு உதவிநிதி காட்டுகிறது என்று மந்திரி புசார் வான் ரோஸ்டி தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள தகுதி பெற்ற சுமார் 8 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் இந்த நோன்பு பெருநாள் உதவித் தொகையை பெறுவர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker