Latestமலேசியா

பிடிபிடிஎன் கடன்: பயணத் தடைக்கு அமைச்சர் எதிர்ப்பு!

கோம்பாக், மே.18- வேலையில்லாத அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வரும் மாணவர்களுக்கு பயணத் தடைபொருந்துவதாக இருக்கக்கூடாது என்று இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

பிடிபிடிஎன் எனப்படும் உயர் கல்விக் கடனைப் பெற்று, திரும்பச் செலுத்த முடியாமல் இருப்போருக்கு எதிராக பயணத் தடையை அமல்படுத்தும் உத்தேசத் திட்டத்திற்கு அவர் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய நிலைப்பாடு இதுதான் என்பதை அமைச்சரவைக்கு தெரிவித்து விட்டேன். பிரதமரிடமும் தெரிவித்துவிட்டேன். பிடிபிடிஎன் கடனுதவி பெற்ற மாணவர்கள் கறுப்புப் பட்டியிலில் சேர்க்கப்படுவதை நான் ஏற்கவில்லை என்பதையும் தெரிவித்து இருக்கிறேன் என்றார் அவர்.

குறிப்பாக, வேலையில்லாமல் இருக்கின்ற அல்லது குறைந்த வருமானத்தில் ஏதாவதொரு வேலையை செய்து கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு இந்த கறுப்பு பட்டியலிடுவது பொருந்தாது என்று அவர் சொன்னார்.

சுமார் 1,200 திருட்டு ரிங்கிட் அல்லது 1,200 ரிங்கிட் சம்பளம் பெறும் ஒருவருக்கு இது மிகப் பெரிய சுமையாக இருக்கும் என்று அமைச்சர் சைட் சாடிக் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker