Latestமலேசியா

மே.22ஆம் தேதி வழக்கறிஞர் அருண் காசி விடுதலை !

கோலாலம்பூர், மே.18- இணையத்தில் தவறான செய்தி வெளியிட்ட குற்றத்திற்காக 30 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்ட வழக்கறிஞர் அருண் காசி, வரும் செவ்வாய்கிழமையன்று விடுதலை செய்யப்படவுள்ளார் என அவர் தரப்பு வழக்கறிஞர் ஜோய் அப்புக்குட்டன் தெரிவித்தார்.

இரு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட  வழக்கில் மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதி ஹமீட் சுல்தான் அபு பக்கார் வழங்கிய ஒரு மாறுபட்ட தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் அகற்றியது தொடர்பாக அவர் கடந்த பிப்ரவரி 16, பிப்ரவரி 22 ஆகிய இரு தேதிகளில் இணையத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரை பதுவு முற்றிலும் தவறு எனக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டடது. அருண் தனது கருத்துக்கள் நியாயமன விமர்சனங்களை கொண்டிருப்பதாக தெரிவித்த நிலையில்  அவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனையும் ரிம. 40,000 வெள்ளி அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் அருண் காஜாங் சிறையில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில்  கடந்த ஏப்ரல் 23ஆம் தெதி தொடங்கி கணக்கிடப்பட்ட சிறை தண்டனை , வரும் மே 22ஆம் தேதியோடு முடியவுறவுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணியளவில் அவர் விடுவிக்கப்படவுள்ளதாக காஜாங் சிறை தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும் நேற்று நானும் மலேசிய வழக்கறிஞர் மன்ற உதவித் தலைவர் ரோஜர் சானும் அருணை சிறையில் சந்தித்தோம். அவர் உடல் சுகமில்லாமல் காணப்பட்டார் என்றும் குறிப்பிட்ட அவர், அருணை வரவேற்க வழக்கறிஞர் குழு சிறை வாசலில் திரளவுள்ளதாகவும் கூறினார்.

இதற்கிடையே, அருணுக்கு விதிக்கப்பட்ட ரிம.40,000 வெள்ளி அபராதத்தை பல வழக்கறிஞர்கள் முன் வந்து செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு தனது நன்றிகளையும் ஜோய் அப்புக் குட்டன் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker