Latestவிளையாட்டு

எப்.ஏ. கிண்ணம்: மன். சிட்டி சாம்பியன்! -வரலாறு படைத்தார் குவார்டியோலா!

லண்டன், மே. 19- இங்கிலாந்து எப்.ஏ. கிண்ண கால்பந்து போட்டியில், நடப்பு பிரீமியர் லீக் சாம்பியனான மன்செஸ்ட்டர் சிட் டி 6- 0 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் குழுவை வென்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல பயிற்சியளரான பெப் குவார்டியோலா தலையிலான மன்செஸ்ட்டர் சிட்டி, இவ்வாண்டுக்கான இங்கிலாந்து கால்பந்து போட்டிகளில் 3 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருக்கிறது.

நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் மன்செஸ்ட்டர் சிட்டி தனது அபார ஆட்டத்தின் மூலம் வாட்போர்டு குழுவை நிர்மூல மாக்கியது. முற்பகுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அது முன்னணி வகித்த போதிலும் பிற்பகுதி ஆட்டத்தில் மேலும் நான்கு கோல்களை அடித்து 6- 0 என்ற கோல்களில் வாகை சூடியது.

மன்செஸ்ட்டர் சிட்டியின் டி சில்வா, கேப்ரியல் ஜீசஸ், டி பெரூன், ஸ்டெர்லிங் ஆகியோர் இந்த கொல்களை அடித்தனர். இவ்வாண்டில் மட்டும் பிரீமியர் லீக், எப்.ஏ. கிண்ணம் மற்றும் கராபோவ் கிண்ணம் ஆகிய 3 சாம்பியன் கிண்ணங்களையும் வென்று மன்செஸ்டர் சிட்டி வரலாறு படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker