Latestவாழ்க்கை

கைகள் இல்லாமல் கால்களில் விமானம் ஓட்டும் இளம்பெண்!

வாஷிங்டன், மே.19- இரண்டு கைகளும் இல்லாத நிலையில் மாற்றுத் திறனாளிகள் சாதனை படைப்பது வழக்கமாக இருந்து வந்தாலும் இளம் பெண் ஒருவர் தன்னுடைய கால்களைப் பயன்படுத்தி விமானம் ஓட்டி சாதனைப் புரிந்து வருகிறார்.

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்தவர் ஜெசிக்கா கோக்ஸ் (வயது 30) என்ற அந்தப் பெண் பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஜெசிக்கா வளர வளர தனது கால்களை கைகள் போன்று போன்று பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டார்.

சின்ன வயதிலிருந்தே விமானத்தின் மீது விமானிகளின் மீதும் அதிக அபிமானம் கொண்டிருந்த ஜெசிக்காவுக்கு விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இருந்து வந்தது.

இந்நிலையில் பட்டப்படிப்பு முடிந்ததும் தொடர்ந்து அவர் விமான பயிற்சிக்கான சிறப்புப் பயிற்சியாளரை தேடித்துக் கொள்ள முயன்றார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

பின்னர் இலகு ரக விமானங்களை ஓட்டுவதற்கான உரிமத்தை அவர் பெற்றார். இதன் காரணமாக கைகள் இல்லாமல் கால்களால் விமானம் ஓட்டும் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். அது, மட்டுமன்றி ஜெசிக்கா இயல்பாகவே கராத்தே, அதிவேகக் கார் ஓட்டுதல் போன்ற திறமைகளையும் கொண்டிருப்பவர் ஆவார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker