Latestமலேசியா

கொலையுண்ட தாதி: நைஜீரியருக்கு ஏற்கெனவே அறிமுகம்! – போலீஸ்

கோலாலம்பூர், மே. 19- செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியான சித்தி கரினா (வயது 40) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கும் அந்த நைஜீரியாக்காரர் ஏற்கனவே இந்த தாதிக்கு அ றிமுகமானவர்தான் என்று போலீசார் தெரிவித்தனர்

கடந்த ஆண்டு முதல் சமூக ஊடகங்கள் மூலமாக இவர்களுக்கு அறிமுகம் இருந்திருக்கிறது என்று புலன் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சிலாங்கூர் குற்றவியல் விசாரணை துறையின் உதவி ஆணையர் ஃபாட்ஜில் அமாட் தெரிவித்தார்.

இந்தப் படுகொலையில் முக்கிய நபராக சந்தேகிக்கப்படும் அந்த நைஜீரியாக்காரர் கடந்த ஆண்டு ஜனவரியில் மலேசியாவுக்கு வந்து தாதி கரினாவை சந்தித்திருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

விசாவில் நாட்டிற்குள் நுழைந்து அவர் பின்னர் அனுமதிக்கப்பட்ட காலத்தை காட்டிலும் கூடுதலாக இங்கேயே தங்கி வாழ்ந்து வருகிறார் என்றார் அவர்.

மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கும் 35 வயதுடைய மற்றொரு நைஜீரிய பெண்மணியும் 38 வயதுடைய ஒரு பாகிஸ்தானிய நபரும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் எட்டாம் தேதியன்று காணாமல் போன தலைமை தாதி சித்தி கரினா, சில நாட்களுக்குப் மக்களுக்கு பின்னர் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கழுத்து வெட்டப்பட்டு இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker