Latestமலேசியா

சிரியாவில் 65 மலேசியர்கள் தடுத்து வைப்பு: 39 பேர் நாடு திரும்ப விருப்பம்!

கோலாலம்பூர், மே 19 – சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 65 மலேசியர்களில் 39 பேர் மலேசியாவுக்கு திரும்ப விரும்புவதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர். அதில் 10 ஆண்களும் 12 சிறுவர்களும் 6 சிறுமிகளும் அடங்குவர் என புக்கிட் அமான் தீவிரவாத சிறப்புப் பிரிவின் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

அவர்கள் தங்களைத் தொடர்பு கொண்டு உதவும்படி கேட்டுக் கொண்டதாகவும் அதில் பல்வேறு  சிக்கல்கள் உள்ளதோடு அதனை அரசுதான் முன்னின்று செய்ய வேண்டும் என்றார் அவர். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிலரே நாடு திரும்ப விரும்புவதாகவும் ஆனால், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

அல்-ஹசக்கா மற்றும் இடிப் ஆகிய பகுதிகளில் அதிகமான மலேசியர்கள் சிக்கி இருப்பதாகவும் சிலர் தங்களின் கணவன்மார்கள் கொல்லப் பட்டதாலும் இன்னும் சிலர் வேறு சில காரணங்களினாலும் நாடு திரும்ப விரும்புகின்றனர்.

கடந்தாண்டு அக்டோபரில் ஒரு மாதுவும் அவரின் இரண்டு பிள்ளைகளும் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டனர். ஐஎஸ் தீவிரவாதியான அவரின் கணவர் அங்கு கொல்லப்பட்ட பின்னர், அவர் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker