Latestமலேசியா

செமாங்கோலில் வாகன விபத்து: 3 வெளிநாட்டுக்காரர்கள் மரணம்!

ஈப்போ, மே 19 – வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 190ஆவது கிலோ மீட்டரில், சிம்பாங் அம்பாட் , செமாங்கோல் எனும் இடத்திற்கு அருகில் நேர்ந்த வாகன விபத்தில் வெளிநாட்டுக்காரர்கள் என நம்பப்படும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த விபத்தில் வெளிநாட்டினர் 14 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம். இவர்கள் பயணம் செய்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது என பேரா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காலை 7.34 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவம் நடந்த இடத்திற்கு தாங்கள் விரைந்ததாகவும் பின்னர் விபத்தில் உயிர்நீத்த 3 வெளிநாட்டுக்காரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதோடு  காயமடைந்த மற்றவர்களும் உடனடியாக மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாகவும் அந்தப் பேச்சாளர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker