Latestமலேசியா

ஜோகூரில் ரேப்பிட் பேருந்து முனையம்! 2022இல் செயல்படும்!

பெட்டாலிங் ஜெயா, மே 19 – ஜோகூரில் திட்டமிடப்பட்டுள்ள 256 கோடி ரிங்கிட்டிலான பேருந்து ரேப்பிட் (பிஆர்டி) போக்குவரத்து முனையம்  2022ஆம் ஆண்டு வாக்கில் செயல்பாட்டுக்கு வரும்.

பேருந்து போக்குவரத்தோடு இலகு ரயில் திட்டமும் இணைந்த  அதன் கட்டுமானம் அடுத்தாண்டு முதல் காலாண்டில் தொடங்கப்பட்டு 2022இல் அமலுக்கு வரும் என மலேசிய பேருந்து ரேப்பிட் டிரான்சிட் நிறுவன இயக்குநர் ருடியாந்தோ அஷார் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவை தெப்ராவ் வட்டாரத்தில் உள்ள தோழிற்பேட்டைகளோடும் ஸ்கூடாய் மற்றும் நுசாஜெயாவில் உள்ள பல்கலைக்கழங்களோடும் இணைப்பு ஏற்படுத்தப்படும். பிஆர்டி 42 நகர்புறங்களோடும் 26 வட்டாரங்களோடும் பேரங்காடிகள், மருத்துவமனைகள், சுற்றுலாத் தலங்கள்  ஆகியவற்றோடும் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

அத்திட்டத்திற்கு 100 கோடி ரிங்கிட் செலவாகும் என்றும் அதில் தனியார் துறையும் இணைத்துக் கொள்ளப்படும். அத்திட்டம் கொலம்பியாவில் உள்ள போகோத்தா சீனாவில் உள்ள குவாங் சோ ஆகியவற்றின் கூறுகளைக்  கொண்டிருக்கும்.

உலகின் அம்மாதிரியான திட்டத்தில் 170 நகர்கள் இணைக்கப் பட்டிருப்பதாகவும் அதில் 33 மில்லியன் பேர் பயனடைந்து வருவதாகவும்  தெரிவிக்கப் பட்டுள்ளது. தென்கிழக்காசியாவில் ஜக்கார்த்தா, ஹானோய் மற்றும் பேங்காக்கிலும்  அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker