Latestமலேசியா

பங்கோர் விமான நிலையம் மேம்படுத்தப்படும்! பேரா அரசு

ஈப்போ,  மே.19 –  பங்கோரிலுள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று பேரா சுற்றுலா, கலை, பண்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தான் கார் ஹிங் தெரிவித்தார்.

அது பற்றி தாம் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார். பங்கோர் விமான நிலையத்துடன் ஈப்போ மற்றும் சுபாங் விமான நிலையங்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

ஹாங்காங் பயணிகளோடு ஈப்போ சுற்றுலா பேருந்து சேவையில் (ஹோ ஹோ) கலந்து கொண்டபோது, அந்தச் சேவையை இதுவரை  ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி இருப்பதாகவும் இந்தச் சேவையானது தம்புன், கோப்பெங், பத்துகாஜா போன்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker