Latestமலேசியா

பிற சமயங்களைப் பற்றி மாணவர்களுக்குப் போதிக்க பரிந்துரை!

கோலாலம்பூர், மே 19 – நல்லிணக்கத்தைப் பேண பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்ற சமயங்களைப் பற்றிப் போதிக்கும் பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மலேசிய இளைஞர் மன்றத்தின் தலைவர் ஜுபிட்ரி ஜோஹா அதனைத் தெரிவித்ததோடு மாணவர்கள் தங்களது மதத்தை மட்டுமே தெரிந்து கொள்வதோடு,  மற்ற மதங்களையும் தெரிந்து கொள்வது நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் வழி வகுக்கும்  என குறிப்பிட்டார்.

நேற்று நடந்த கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய அவர், அதனை ஒரு தனி பாடமாகவும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தலாம் என்றும் பல்லின, பல சமயங்களை அனுசரிக்கும் நாட்டில் , அது அமைதியைக் கொண்டுவரும் என தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker