Latestமலேசியா

போலீஸ் காவலில் ஆணுறுப்பில் மிளகாயை தடவினர்! -மகேந்திரன் சுஹாகாமில் புகார்

கோலாலம்பூர், மே 19 – திருட்டுச்  சம்பவம் தொடர்பில்  தடுப்புக் காவலில் வைக்கப் பட்டிருந்தபோது,   மனித  குலத்திற்கு ஒவ்வாத மனிதாபிமானமற்ற வகையில் தாக்கப்பட்டதாக  எஸ்.மகேந்திரன் என்பவர் சுஹாகாமிடம் புகார் தெரிவித்துள்ளார்.

தம்மை போலீஸ் தேடுவதை அறிந்து செந்தூல் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தாகவும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அந்தக் கொடூரம் நடத்தப்பட்டதாகவும் மலேசிய மனித உரிமை ஆணையத்திடம்(சுஹாகாம்) எஸ்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தாம் சரணடைந்த முதல் நாளே, தாம் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும், தாம் விலங்கிடப்பட்டு, கழுத்துப் பகுதியில் அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, குத்தப்பட்டு, முழு நிர்வாணமாக்கப் பட்டதாகவும் தெரிவித்தார்.

அரைத்த மிளகாய் கரைசலை உடல் முழுக்க தடவியதோடு, தமது ஆணுறுப்பிலும் அதனைத் தடவி கொடுமை புரிந்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதோடு, தம்மை ஐஸ் கட்டியின் மீது படுக்க வைத்துக் கொடுமை புரிந்ததாகவும் அது தடுப்புக் காவலில் தாம் இருந்த ஒவ்வொரு நாளும் 13 மணி நேரம் கொடுமைப் படுத்தப்பட்டதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது தாயாரைக் கொடுமைப்படுத்தப் போவதாகவும் தமது சகோதரியை கற்பழிக்கத் தயங்கப் போவதில்லை எனவும்  விசாரணை அதிகாரிகள் அச்சுறுத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

கடைசி நாளான்று,  மினனணுக் கதிர் மூலம் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தரப்பட்டதாகவும் அதில் அவர் தப்பிப் பிழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கொடுமையை தெரிவித்தால்,  தாம் மீண்டும் கைது செய்யப்பட்டு அதே கொடுமையில் ஈடுபடுத்தப்படுவார் எனவும் அவர்களால் அச்சுறுத்தப் பட்டதாகவும் மகேந்திரன் சொன்னார்.

இது பற்றி செந்தூல் போலீஸ் தலைவர் எஸ்.சண்முக மூர்த்தியிடம் கேட்டபோது, அறிக்கை கிடைத்த பின்னர் அது பற்றி விசாரிக்கப்படும் என்றும்  போலீசார் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker