Latestமலேசியா

மாணவர்களுடன் ஓரினப் புணர்ச்சி: ஆசிரியர் கைது

கோலாலம்பூர், மே 19 – மிரி, லாவாஸில் மாணவர்களை மானபங்கம்செய்து ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்த 39 வயது ஆசிரியர் குறைந்தது 7 மாணவர்களுடன்  உறவு வைத்திருந்ததாகவும் அந்த மாணவர்கள் தற்போது இடைநிலைப் பள்ளிகளில் கல்வி கற்று வருவதாகவும் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட ஒரு மாணவன் நடந்த விவகாரத்தை நண்பர்களிடம்  சொல்லி இருக்கின்றான். அதில் ஒருவன் அதனை தனது தாயாரிடம் சொல்ல, அவர் அதனை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர்,பாதிக்கப்பட்ட இருவர் வாக்குமூலம் அளிக்க முன் வந்தனர். அந்த ஆசிரியர் அப்பள்ளியில் 2012லிருந்து போதித்து வருவதாகவும் அவரால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் இன்னும் அப்பள்ளியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

லாவாஸ் டிஎஸ்பி புகாரைப் பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தினார்.  ஆசிரியரின் இந்த ஓரினப் புணர்ச்சி 2016ஆம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு முடிவுக்கு வந்ததாகவும் ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதனைப் பற்றி பெற்றோரிடம் புகார் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker