Latestமலேசியா

வியட்நாம் மீனவர் ஊடுருவலை தடுக்க மலேசியா திட்டம்!

குவாந்தான், மே 19 – வியட்நாமிய மீனவர்கள் மலேசிய கடல் எல்லையில் ஊடுருவுவதைத் தடுக்க அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

தாம் வியட்நாமுக்குச் செல்லும்போது, அந்நாட்டு பிரதமர் நுயென் சுவான் புக் மற்றும் துணைப் பிரதமர் பாம் பின் மின்ஹாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருப்பதாகவும் அம்மாதிரியான  ஊடுருவும் வியட்நாமியர்களைத் தடுத்து வைத்து, வழக்குக்கிற்குப் பின்னர் சொந்த நாட்டுக்கு அனுப்புவது வாடிக்கையாக இருப்பதால், அதனை நிரந்தரமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் த்ரிவித்த்தார்.

2016இல் இருந்து மே 2019 வரை 748 மீன்பிடி படகுகளும் 7103 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அது பற்றிய உடன்படிக்கை ஒன்று வியட்நாமோடு  உடன்படிக்கை செய்து கொள்ளப்படும். இந்தோனேசியாவோடு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை போன்று அது இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker