Latestமலேசியா

அன்னைக்கோர் ஆராதனை நிகழ்ச்சி (VIDEO)

“நாளை நமதே” பத்திரிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் ” 2019 ஆண்டின் அன்னைக்கோர் ஆராதனை” எனும் சிறப்பு நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

தலைநகர் டான்ஶ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்திரி தம்பதியினரின் புதல்வி விஜய சாமுண்டிஸ்வரி கலந்துக் கொண்டார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில் 7 அன்னைமார்களுக்கு அவர்களது பிள்ளைகள் மூலமாகவே பொன்னாடை- மலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும் நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்திரி நடித்த திரைப்பட பாடல்களும் உள்ளூர் கலைஞர்களால் பாடப்பட்டன. அத்துடன் அன்னைமார்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.

நிகழ்வில் பேசிய விஜய சாமுண்டிஸ்வரி, அன்னைகளை கெளரவிக்கும் இந்த நிகழ்வு தாம் எதிர்பார்த்தை விட மிக சிறப்பாக நடத்தேறியது என குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து “நாளை நமதே” பத்திரிக்கை குழும நிர்வாக இயக்குனர் டத்தின் ஜெய கோகிலவாணி கூறுகையில், இந்த சிறப்பு நிகழ்வை தாம் தொடர்ந்து மூன்று வருடங்களாக நடத்தி வருவதாக தெரிவித்தார். அன்னையர்களின் அர்ப்பணிப்பு அளப்பறியது. அவர்களை நாம் எந்நாளும் போற்ற வேணும் என்றும் அவர் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker