Latestமலேசியா

ஆலயத்தில் துப்பாக்கி வேட்டு! – நால்வர் பிணையில் விடுதலை!

தஞ்சோங் காராங், மே.17- அண்மையில் ஆலயம் ஒன்றில் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளைக் கிளப்பிய குற்றத்திற்காக காவல் துறையில் சரணடைந்த 4 நபர்கள் இன்று பிணையில் விடுவிக்கப் பட்டார்கள்.

தஞ்சோங் காராங், சுங்கை பூரோங், பாரிட் 4 பகுதியில் உள்ள ஶ்ரீபச்சை மருது முனியாண்டி ஆலயத்தில்  ஆலய திருவிழா நிகழ்வொன்றில் இந்த நான்கு ஆடவர்கள்  “டபுள் பேரல்’ ரக துப்பாக்கியை கொண்டு வானத்தை நோக்கி சுமார் 20 முறை வேட்டுகள் கிளப்பும் காணொளி அண்மையில்  சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அந்நபர்களை  தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர்கள் நால்வரும் மாவட்ட காவல் தலைமையகத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கியையும் 17 தோட்டாக்களையும் காவல்துரையினர் கைப்பற்றியுள்ளனர்.

1960 ஆம் ஆண்டின் ஆயுத சட்ட செக்‌ஷன் 39ஆவது பிரிவின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டு 36 வயதிலிருந்து 72 வயது வரைக்குமான அந்நால்வரும்  நான்கு நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர். தடுப்பு காவல் அவகாசம் இன்றுடன்  முடிவுற்றதால் அந்நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker