Latestமலேசியா

கார் மோட்டார் சைக்கிள் விபத்து: மாது மரணம்!

ராவுப்.மே 20 – பத்து மாலிம், கோலாலம்பூரிலிருந்து கோத்தா பாரு செல்லும் வழியில் கிலோமிட்டர் 338-ல் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நடந்த சாலை விபத்தில் மாது ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

நேற்று காலை மணி 10.20 மணியளவில் நடந்த இவ்விபத்தில் ராவுப்,கம்போங் தெரிசாங் சேர்ந்த நூர்லினா முகம்மட் நூர் (வயது 55) என அடையாளம் கூறப்பட்ட இவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தின் போது புரோடுவா கேலிசா ரக காரில் கம்போங் சேரோகிலிருந்து கம்போங் தெரிசாங்கை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கார் ஓட்டுனர் தூக்கத்தில் காரை செலுத்தியதால் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நூர்லினாவை மோதியதால்; நூர்லினா சில மீட்டர் தூரத்திற்கு அக்காருடன் சாலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார் என ராவுப் வட்டார காவல் துறை அதிகாரியான வான் முகம்மட் சாஹாரி புசு தெரிவித்தார்.

மேலும் இவ்விபத்தில் இறந்த நூர்லினாவின் உடலை பிரேதப்பரிசோதனைக்காக ராவுப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ; அந்த காரின் ஓட்டுனர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார் என முகம்மட் சாஹாரி கூறினார்.

இச்சம்பவம் குறித்து செக்கஷன் 41(1) பிரிவின் சாலை போக்குவரத்து சட்டத்தில் 1987-கில் விசாரனை நடந்தப்படும் எனவும் மேலும், அந்த கார் ஓட்டுனரை பரிசோதித்து பார்த்ததில் அவர் போதைப்பொருள் எதுவும் உற்கொள்ளவில்லை என தெரிய வருவதாக முகம்மட் சாஹாரி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker