Latestமலேசியா

கால்வாயில் மறைத்து வைத்த கைத் துப்பாக்கி!

மிரி, மே 20 –  வீடமைப்புப் பகுதியின் கால்வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கியையும் பயன்படுத்தப்படாத குண்டுகளையும் மிரி போலீசார் கைப்பற்றி உள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஒரு குழாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  வால்ட்டர்  பிபிகே 7.65 எம்.எம். கைத் துப்பாக்கி, தாமான் துங்குவில் இருக்கும் தாமான் ஜெலித்தாவின் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

அந்தக் கைத்துப்பாக்கி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் வரிசை எண் மாற்றப்பட்டுள்ளது. தாமான் ஜெலித்தாவில் நடந்த கொள்ளைச்  சம்பவத்தில் போலீசாருடம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அது பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மே 16ஆம் தேதி தாமான் ஜெலித்தாவில் இரட்டை மாடி வீட்டில் துப்பாக்கிக் காரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ்காரரும் கொள்ளையனும்  காயமடைந்தனர்.

ஒருவன் கைது செய்யபட்ட வேளையில் மற்றொருவனைப் போலீசார் தேடி வருகின்றனர். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு வீட்டின் முன், காரொன்று இருப்பதைக் கண்டு அதனை விசாரிக்கச் சென்றபோது,  போலீசாரை நோக்கிச் சுட்டனர்.  தப்பியோடியுள்ள கொள்ளையன் ஆயுதம் தாங்கிய ஆபத்தானவன் எனப் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker