Latestமலேசியா

சுற்றுச் சூழலை மாசுப்படுத்துபவர்கள் மீது கடும் தண்டனை! – புதிய சட்டம்

பெட்டாலிங் ஜெயா, மே.20- தற்பொழுது வழி வகுக்கப்பட்டு வரும் புதிய சட்டத்தின் அடிப்படையில் சுற்று சூழல் சம்பந்தப்பட்ட குற்றங்களை புரிபவர்களுக்கு ரிம. 5 மில்லியன் வெள்ளி வரை அபரதம் விதிக்கப்படவுள்ளது.

மேலும் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்டவிரோத பிலாஸிக் கழிவுகள் இறக்குமதி குற்றம் குறித்தும் இப்புதிய சட்டத்தில் தண்டனை நிறைவேற்றவுள்ளது. எடுத்துகாட்டாக, சுற்று சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதில் தோல்வி அடையும் தரப்பினருக்கு ரிம.1 மில்லியன் அல்லது அதிகப்பட்சம் 5 ஆண்டுகல் சிரை தண்டனை அல்லது இரண்டும்  இப்புதிய சட்டத்தின் கீழ் தண்டனையாக வழங்கப்படும்.

அதே சமயம், நோட்டீஸ் வழங்கப்பட்ட போதிலும் சுற்று சூழல் பாதிப்படையக் கூடிய குற்றங்களை தொடர்ந்து புரிந்து வரும் நபர்கள் ரிம.5,000 வெள்லி வரையிலான தினசரி அபராதமும் விதிக்கப்படும்.

மேலும் காற்று, நிலம், நீர், கடல் ஆகியவற்றை மாசுப்படுத்ததுவர்கள் மீதும் அதிகளவில் அபராதம் விதிக்கப்படும். குரிப்பாக மலேசிய கடற் பகுதிகளில் எண்ணெய் கொட்டும் தரப்பினரிடமிருந்து ரிம.5 மில்லியன் வரையும் திறந்த வெளியில் தீ மூட்டுவர்களிடமிருந்து ரிம.100,000  வரையும் அபராதம் வசூலிக்கப்படும். மாசுபாடு குற்றங்கள் பெரும்பாலானவற்றுக்கு 5 ஆண்டுகள் சிறைவாசம் , கூடுதல் அபராதங்கள் தினசரி அடிப்படையில் இப்புதிய சட்டத்தின் கீழ் விதிக்கப்படவுள்ளன.

தொடர்ந்து அரசு ஒப்புதல் இல்லமல் கழிவுப் பொருட்களை அகற்றுவது அல்லது இடமாற்றம் செய்வது அல்லது விநியோகம் செய்வது போன்ற செயல்களுக்கு வரம்பு-தடை விதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது. அத்தடை நிறைவேற்றப்பட்டால் இக்குற்றங்களை புரியும் தரப்பினருக்கு ஒரு மில்லியன் வரை அபராதமும் 5 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும். இதற்கிடையே, சிறந்த முறையில் சுற்று சூழலை பேணுபவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் இப்புதிய சட்டத்தின் கீழ் பொது நிதி திட்டமும் செயல்ப்படுத்தப் படவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker