Latestமலேசியா

பள்ளி, உயர்கல்வி கூடங்களில் பல்லின நிகழ்வுகளை நடத்துக! -மஸ்லீ

சிம்பாங் ரெங்காம், மே.20- நாட்டில் வாழும் பல்லின மக்களிடையிலான ஒற்றுமை நிலைத்திருக்க பள்ளி, உயர்கல்வி கூடங்களில் பல்லின கலை – கலச்சார நிகழ்வுகளை அடிக்கடி நடத்த வேண்டும் எனக் கல்வி அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் கருத்துரைத்தார்.

நேற்று தனது நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்து உரையாடும் பொழுது மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டை சிறு வயது முதல் விதைக்க இது நல்லதொரு வழியாக உள்ளது. எனவே பள்ளிகளில் இது இது சார்ந்த நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனக் கல்வி அமைச்சு அறிவுறுத்துகின்றது.

பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளியும் சமயப்பள்ளியும் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. ஜொகூரில் உள்ள சமய பள்ளி ஒன்றும் அருகாமையில் உள்ள இதர பள்ளிகளுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது என அமைச்சர்   சுட்டிக்காட்டிப் பேசினார்.

பொதுவாக இது போன்ற கலை – கலச்சார நிகழ்வு என்றால் பணிகைகள் தான் பள்ளிகளில் கொண்டாடுவர். ஆயினும் வரும் காலங்களில் இன்னும் பல நிகழ்ச்சிககளை பள்ளிகள் இணைந்து நடத்த வேண்டும்.

இது போன்ற நிகழ்ச்சிகளை ஒன்றிணைந்து நடத்துவதால் மாணவர்கள் பல்லின கலை – கலாசாரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பழகவும் வழி வகுக்கப்படுகின்றது என்றும் டாக்டர் மஸ்லி மாலேக் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker