Latestமலேசியா

பெல்டாவாசிகள் நில உரிமையை இழப்பரா? கூற்று உண்மையா?

கோலாலம்பூர், மே 20 –  பெல்டா குடியேற்றவாசிகள் தங்களின் நில உரிமையை இழப்பர் எனும் கூற்றில்  உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழனன்று மாரா தொழிற்நுட்பப் பல்கலைக்கழக  இணைப்பேராசிரியர் ரோஹாயு அப்துல் மஜிட் தமது ஆய்வில், அந்த நிலங்களை இரண்டாவது சந்ததியருக்கு  மாற்றித் தரமுடியாத கட்டுப்பாடு இருப்பதால், அந்த நில உரிமை கைவிட்டுப் போகும் ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆய்வின் கட்டுரை பெரித்தா ஹரியான் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது.  அந்த நிலக் குடியேற்றத் திட்டம் 1967ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தமானது,  தேசிய நில விதிமுறைக்கு முற்றிலும் மாறானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அது பற்றி விளக்கம் அளித்த பெல்டாவின்  சட்டப் பிரிவைச் சேர்ந்த முகமட் யாசின் முகமட் யூசோப், அந்த ஆய்வானது 130 பேரிடம் மட்டுமே பெறப்பட்ட  தகவலின்  அடிப்படையில் எழுத்தபட்டிருப்பதாகத்  தெரிவித்தார்.  நாடு முழுமைக்கும் 112,635 குடியேறிகள் இருப்பதாகவும்  அவர்களின் குடும்பத்தாரோடு மொத்தம் 25 லட்சம் பேர் அங்கு வசிக்கின்றனர்.

அந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு முன்னர்,  பெல்டா ப்ற்றிய அடிப்படைத்  தகவலைப் பெற்றிருக்க வேண்டுமென்று  முகமட் யாசின்  குறிப்பிட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தில் குடியிருப்பாளரின் நிலம் மாற்றிக் கொடுக்கப்படலாம், அடமானம் வைக்கப்படலாம், வாடகைக்கு விடப்படலாம். ஆனால், அதனைத் துண்டு போடாமலும்  பொருளாதார ஆபத்திலிருந்து தவிர்ப்பதற்கும்  அதனை இருவருக்கு மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், அந்த நிலத்தைத் துண்டு போடவோ, பகுதியாக வாடகைக்கு விடவோ முடியாது என அவர் குறிப்பிட்டார். அந்த நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. அதனை மாற்றிக் கொடுக்க நினைத்தால், வாங்குபவர் நாட்டின் பிரஜையாகவும், 18 வயதுக்கு மேலாகியும் அவருக்கு இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மேல் இருக்கக் கூடாது எனவும் நிபந்தனை கூறுகிறது. மேலும் குடியேற்றவாசிகளின்  நிலத்தை, மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அரசு கையகப்படுத்த முடியும் . அதற்கான இழப்பீடு தரப்படும் என முகமட் யாசின்  குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker