Latestஉலகம்

ஹுவவெய்’ கைப்பேசிகளில் ‘கூகுள் பிளேய்’ மென்பொருள் தொடர்ந்து இயங்கும் !

பெய்ஜிங்,மே.20- ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ‘ஹுவாவெய்’ நிறுவன விவேக கைத்தொலைப்பேசிகளில் ‘கூகுல் பிளேய்’ மென்பொருள் தொடர்ந்து செயல்ப்படும் என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா வர்த்தக சந்தை, இந்த ரக கைப்பேசிகளை  கடந்த வாரம் தடை செய்தது. சீனாவில் பிரமாண்டமாக இயங்கும் இக்கைபேசி நிறுவனம், அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனங்களுடன் உபரி பாகங்கள், மென்பொருள்களை வாங்கவும் விற்கவும் கூடாது என அத்தடை உள்ளது.இதனை தொடந்து ‘ஹுவவெய்’ கைப்பேசிகளுக்கு ‘ஆண்டிராய்டு’ எனும் மென்பொருள் உபயோகத்தை வழங்கி வரும் ‘குகூள்’ நிறுவனம் அந்த சேவையை மீஉக் கொள்வதாக  செய்தி வெளியானது.

ஆனால், தற்பொழுது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட – உபயோகத்தில் உள்ள இந்த ரக கைப்பேசிகளில் ‘கூகுள் பிளேய்’ மென்பொருள் தொடர்ந்து இயங்கும். இனி வரும் காலங்களில் தயாரிக்கப்படும் கைப்பேசிகளில் இம்மென்பொருள் சேவை இருப்பது மீளாய்வு செய்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள ஹுவவெய் நிறுவனம் முன்னமே தயாராகி விட்டதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் ‘கூகுள் பிளேய்’ மென்பொருள் இல்லாமல் விவேக கைப்பேசிகளை பயன்படுத்துவது எப்படி என மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker