Latestமலேசியா

1எம்டிபி முறைகேடு: திசைத் திருப்ப -நஜிப் – ஜோ லோ சதி

கோலாலம்பூர், மே 20 –  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் அவரின் வர்த்தகப் பங்காளியுமான ஜோ லோவும், 1எம்டிபி பிரச்சினையிலிருந்து  தப்பிக்க பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு வருவதாக லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார். தண்டனையிலிருந்தும் சுங்கை பூலோ சிறையில் எஞ்சிய காலத்தைக் கழிப்பதைத்  தவிர்க்கவும் அவர் கள்  ‘ஸைபர் டுரூப்பர்ஸ்’ எனப்படும் கும்பலை வைத்துக் கொண்டு பக்காத்தான் அரசின் மீது அவதூறுகளைச் சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாக லிம் குற்றம் சாட்டினார்.

‘மாலு அப்ப போஸ்கூ’ எனும் தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி,  தாங்கள் 1எம்டிபி விவகாரத்தில் தவறிழைக்க வில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். மலாய் மற்றும் இஸ்லாமிய உரிமைகள் யாவும் பக்காத்தான் ஆட்சியில் கைவிடப்படுவதாக விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் பக்காத்தான் ஆட்சியை ஜசெக கட்சியே ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும்  சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் அது துரோகம் இழைத்து வருவதாகவும் பொய் குற்றச்சாட்டுகளைப்  பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டர்.

பக்காத்தான் ஆட்சி தேர்தல் கொள்கை வாக்குறுகளை நிறைவேற்றாமல் மக்களுக்குத்  துரோகம் இழைத்துள்ள தாகவும் அதனை வெறுத்தே மக்கள் கேமரன் மலை, செமிஞ்சே மற்றும் ரந்தாவ் இடைத்தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்ததாக மார் தட்டிக் கொண்டனர்.

ஆனால், சண்டாகானில் பக்காத்தான் அடைந்த வெற்றிக்குப் பின்னர், அவர்கள் பக்காத்தான் உறுப்புக்  கட்சிகளிடையே பிரிவினையை உருவாக்கும் வியூகத்தை அரங்கேற்றி வருவதாக கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker