Latestமலேசியா

அதிபர் தேர்தல் வெற்றி: ஜோக்கோவிக்கு துணைப் பிரதமர் வாழ்த்து !

புத்ரா ஜெயா, மே.21- இந்தோனேசிய அதிபர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோக்கோ விடோடோவிற்கு துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஜிஸா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது மட்டுமின்றி இனிவரும் காலங்களில் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள அவருக்கு உடல் ஆரோக்கியமும் மன வலிமையும் வழங்குமாறு கடவுளிடம் பிரார்த்திப்பதாக அவர் அந்தச் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

மேலும் மலேசியா – இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு அதன் வழி மக்கள் பயனடைவர் என தம் நம்புவதாகவும் துணைப் பிரதமர் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்ற இத்தேர்தலில்  நடப்பு அதிபரான ஜோக்கோ விடோடோ தனது பதவியை தற்காத்து வெற்றி பெற்றதற்கு உலக தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker