Latestமலேசியா

அந்தோணி லோக் மீது எம்ஏசிசியிடம் டாக்சி ஓட்டுநர் சங்கம் புகார்

புத்ரா ஜெயா, மே 21 –  அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து வரும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மீது மலேசிய டாக்சி சங்கங்களின் சம்மேளனமான ஜிடிஎஸ்எம்  ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யும் என அறிவிக்கப்பட்டது.

அந்தோணி லோக் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதாகவும் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தன்மூப்பாக சட்டத்தையும் விதிமுறைகளையும் மாற்றுவதாகவும்  அதன் தலைவர் கமாருடின் முகமட் ஹுசேன்   குற்றம் சாட்டினார்.

அவர் தன்மூப்பாக சாலையைப்  பயன்படுத்துவோருக்கும் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் பாதகமான விதிமுறைகளை செயல்படுத்துவதாகவும் அதனைப் பாதிக்கப்பட்டோரிடம் தெரிவிக்காமலும் கருத்துகளைக் கேட்காமலும் செய்வதாக கமாருடின் தெரிவித்தார்.

அவரின் நடவடிக்கைகள் யாவும் கிரேப் ஓட்டுநர்களுக்குச் சாதகமாகவே இருப்பதாகவும் அதில் ஊழல் அம்சங்கள் இருப்பதாக தங்களின்  சம்மேளனம் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மின்னஞ்சல் அழைப்பு வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு ஆன்லைனில் மூலம் பிஎஸ்வி லைசன்ஸ் எடுக்கவும் அதன் கட்டணத்தைக் குறைக்கவும் செய்திருப்பதாகவும் அந்த விவகாரத்தைத் பிரதமருடன் விவாதிக்க  ஒப்புதலைப் பெற கடிதத்தைக் கொடுத்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கடிதத்தில், அந்தோணி லோக்கோடு கூட்டம் நடத்துவதற்கு 8 கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் ஆனால், இது வரை அதற்கு எந்தப் பதிலையும்  தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker