Latestஇந்தியா

‘நான் ஓரின சேர்க்கையாளர்” -இந்திய வீராங்கனையின் அறிவிப்பால் பெரும் சர்ச்சை!

புதுடில்லி,மே. 21-“நான் ஓர் ஓரின சேர்க்கையாளர் என்று இந்தியாவின் பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டி சாந்த் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டி சாந்த். இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஒடிசாவை சேர்ந்த 23 வயதான இவர், சில ஆண்டுகளுக்கு முன் பாலின பிரச்சினையில் சிக்கினார்.

அதாவது ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி, தட களப் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு விளையாட்டுக்கான விசாரணை மன்றத்தில் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.

இந்நிலையில் தான் ஓர் ஓரின சேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டுஈப்போது புதிய சர்ச்சையில் கிளப்பி இருக்கிறார். ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள் என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்கள் தைரியமாக வெளி உலகுக்கு சொல்லி இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.

இதுபற்றி நேற்று கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக எனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணின் தொடர்பில் இருக்கிறேன். அந்தப் பெண் புவனேஸ்வரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

அவர் எனக்கு சொந்தக்காரர்தான். அவரது வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் நிறைய நேரத்தை செலவிடுகிறேன். அவர் எனது உயிர்மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன். எனது வீட்டை மூத்த சகோதரி கவனித்து வருகிறார். வீட்டில் அவரது ஆதிக்கம் தான் எப்போதும் இருக்கும்.

தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சகோதரனின் மனைவியை எனது அக்கா வீட்டை விட்டே விரட்டி விட்டாள். இப்போது அவர் என்னையும் குடும்பத்தில் சேர்க்க மாட்டேன் இங்கிருந்து போய்விடு என்று மிரட்டுகிறார். ஆனால் எனக்கு 23 வயது ஆகிறது.

சட்டப்படி எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் முழு உரிமை உண்டு. அதனால் இன்னொரு சேர்ந்து பெண்ணுடன் வாழப்போவதை வெளிப்படையாகச் சொல்கிறேன். எனது சகோதரி, இந்த உறவு நீடிக்கும் பட்சத்தில் என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டி வருகிறார். இவ்வாறு டுட்டி சாந்த் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இதனால் இப்போது பலத்த சர்ச்சை மூண்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker