Latestமலேசியா

பாக்காத்தானுக்கு எதிர்ப்பு: யாப்பெம் தலைவர் இடைநீக்கம்

கோலாலம்பூர், மே 21 – இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை (யாப்பெம்) -இன் தலைமை இயக்குநர்  அபிபுல்லா  சம்சுடின், விசாரணைக்காக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதனை அறிவித்த அந்த அறக்கட்டளையின் தலைவர் முகமட்  டாவுட் பாக்கார், அவருக்குப் பதிலாக மூத்த இயக்குநார் பரிஹா ஹசானை பொறுப்புத் தலைமை இயக்குநராக நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு முன்னர் அபிபுல்லா பக்காத்தானுக்கு எதிராகப் பேசியதாகவும், அறக்கட்டளையின் பணியாளர்கள் பக்காத்தானுக்கு வாக்களிக்கக் கூடாதென எச்சரிக்கை விடுத்த்ப் பேசியதாக வீடியோ பதிவு ஒன்று பரவியுள்ளது.

அந்த வீடியோ பதிவில், பக்காத்தானுக்கு வாக்களித்தவர்கள் யார் என்பதைத் தாம் கண்டறிய முடியும்.  பக்காத்தானுக்கு வாக்களித்தவர்கள்  யாப்பெமில் வேலை செய்ய தகுதியற்றவர்கள் என அவர் பேசியது பதிவாகியுள்ளது.

இது பக்காத்தான் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அவரின் மீது நடவடிக்கை எடுக்க வெண்டுமென்ற நெருக்குதலும் கொடுக்கப்பட்டிருந்தது.

இது பற்றிப் பிரதமர் துறை துணை அமைச்சர் ஃபுஸியா சாலேயிடம் கேட்கப்பட்டபோது, அபிபுல்லாவை பழி வாங்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது, பக்காத்தானுக்கு ஆதரவளிக்காதவர்கள்ளைத் தண்டிக்கும் நடவடிக்கை அரசு மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker