Latestமலேசியா

பிரபல எப்.1 கார் வீரர் நிக்கி லவுடா மரணம்!

வியன்னா, மே.21- மூன்று  முறை போர்முலா-1 அதிவேக கார் பந்தய சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் நிக்கி லவ்டா மரணமடைந்தார். இவரது மரணம் கார் பந்தய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதாகிய அவர், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் நுரை ஈரல் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து நோய் வாய்பட்ட காரணத்தினால், கடந்த ஜனவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்றைய தினம் மரணமடைந்தார் என ஆஸ்திரியா பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இவரது கார் தீப்பற்றி எரிந்ததில் இவரது உடல் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியது. மரணப் படுக்கையில் பல நாள்கள் போராடிய இவர் பின்னர் உயிர் பிழைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பந்தய உலகில் இருந்து விலகினார்.

நிக்கி லவுடா மிகத் திறமையான பந்தய கார்வீரர். அவரது வெற்றிகள் என்றும் மக்கள் மத்தியில் நினைவில் இருக்கும் என அவரது முன்னாள் பந்தய அணியான  “மெக்லெரன்” நிறுவனமும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளது.

நிக்கி லவுடா “மெர்சடிஸ்” மற்றும் “பெராரி” குழுமத்துடன் இணைந்து கடந்த 1975, 1977, 1984 ஆண்டுகளில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

அண்மையில் கூட இவரது வாழ்க்கையில் சில முக்கிய தருணங்களை திரைப்படமாக எடுத்துள்ளனர். ‘ரஸ்” என்ற பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தில் நிக்கி லவுடா – மற்றோர் பந்தய கார் ஓட்டுனரான ஜேம்ஸ் ஹண்ட் இடையிலான கடும் போட்டி சித்திரிக்கப்பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker