Latestமலேசியா

ரசாக் பகிண்டா மீதான பிரான்சின் வழக்கில் மாற்றங்கள்!

பாரிஸ், மே 21 – மலேசியாவுக்கான நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதலில் சம்பந்தப்பட்டிருந்த நஜிப்பின் நண்பரான ரசாக் பகிண்டாவின் குற்றங்களில் சிலவற்றை அந்நட்டு அரசு நீக்கியிருக்கிறது,

முன்னாள் பிரதமர் நஜிப்  சம்பந்தப்பட்டுள்ள 1எம்டிபி வழக்கில் அவருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும்  ரசாக் பகிண்டாவும் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை பிரான்ஸ் நீதித்துறை எடுத்துள்ளது.

2000ஆம் ஆண்டுகளில், நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்தபோது இரு நீர்மூழ்கிக் கப்பல்களை 100 கோடி யூரோவுக்கு( ரிம. 466 கோடி) பிரான்சின் தேல்ஸ் குழுமத்திலிருந்து வாங்கபட்டன.

2010ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட தணிக்கைச் சோதனையில்,  அந்தக் கொள்முதலை ஏற்பாடு செய்த ரசாக் பகிண்டாவின் தெராசாசி நிறுவனம் ஆலோசனைக் கட்டணம் என்ற வகையில் பெரிய தொகையை வசூலித்திருந்தது.  அது ஊழல் என்றும் குற்றம் சாட்டப்பட்டு  2017ஆம் ஆண்டு பிரான்ஸ் நீதிமன்றம் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தற்போது, பிரான்ஸ் நீதிமன்றம் அவர் மீதான ஒரு குற்றத்தை மீட்டுக்கொண்டு மற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர முடிவெடுத் துள்ளது.

இந்த வழக்கில் பிரான்ஸ் தற்காப்பு அதிகாரிகள் நால்வர் மீது ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும், ரசாக் பகிண்டாவின் மனைவிக்குச் சொந்தமான பெரிமெக்கார் எனும் நிறுவனம் அந்தக் கொள்முதலில் 11.4 கோடி யுரோவை கையூட்டாகப் பெற்றதுவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker