Latestமலேசியா

முன்னாள் சுல்தானுக்கு மக்கள் இறுதி அஞ்சலி: நாளை பகாங்கில் பொது விடுமுறை!

குவாந்தான், மே. 22- முன்னாள் பகாங் சுல்தான், சுல்தான் அகமட் ஷா காலமானதைத் தொடர்ந்து பகாங் மாநிலத்தில் 40 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதோடு நாளை மே 23ஆம் தேதி வியாழக்கிழமை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காலஞ்சென்ற சுல்தானுக்கு பொதுமக்கள் தங்களது இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு இந்த விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது.

பெக்கானிலுள்ள உள்ள ளைஸ்தானா அபுபக்கார் அரண்மனையில் பொதுமக்கள் அவருக்கு தங்களின் இறுதியாக அஞ்சலியை  செலுத்ணின்று முதல் வகை செய்யப்பட்டிருக்கிறது.

நாளை காலை 11 மணியளவில் அரச குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. சுல்தான் அகமட் ஷா பள்லிவாசலை அடுத்துள்ள அரச மையத்துக் கொல்லையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker