Latestமலேசியா

வாரிசான் கட்சித் தேர்தல் ஊழல்: எம்ஏசிசி விசாரிக்க கோரிக்கை

கோத்தா கினபாலு, மே 22 – வாரிசான் சபா கட்சியின் அண்மைய தேர்தலில் நடந்த ஊழல் முறைகேட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டுமென்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.

கட்சித் தேர்தலில் சில நபர்கள் பேராளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரித்ததை விசாரணை செய்யும்படி புதிதாக உருவாக்கப்பட்ட மலேசியா ஊழல் தடுப்பு இயக்கத்தின் (கெராம்) பேச்சாளர்  ராவுஃப் ஜுவாலிஸ்  எம்ஏசிசியைக் கேட்டுக் கொண்டார்.

உச்சமன்றத்துக்குப் போட்டியிட்ட சிலர் பேராளர்களுக்கு 100 லிருந்து 150 ரிங்கிட் வரை லஞ்சம் கொடுத்ததாக அவர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவானது வைரலாகப் பரவியதை அடுத்து  அதில் உண்மை இருக்கும் என்பதால், அதனை எம்ஏசிசி அமைச்சர்களில் இருந்து  அரசியல்வாதிகள்  வரை விசாரிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

அதில் பணம் வாங்கிக் கொண்ட சிலரின் புகைப்படங்களை உச்சமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த இஸ்மாயிலி என்பவர் வெளியிட்டிருந்தார். கட்சித் தேர்தலில் லஞ்சம் கொடுப்பது நிறுத்தப்படாவிட்டால், அது கட்சியையே சீர்குலைத்து விடும் என அவர் தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 100,000 ரிங்கிட் அபராதமும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker