Latestஇந்தியா

ஆந்திரா; ஜெகன் ரெட்டி ஆட்சியை பிடித்தார்! முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா!

ஐதராபாத்,மே.23- ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 146 தொகுதிகளில் முன்னிலை பெற்றதால் முதல்வர் பொறுப்பிலிருந்து சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம்,சிக்கிம், ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் தமிழகம், புதுச்சேரி, உட்பட பல மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலில் நடந்து முடிந்துள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை  தொடங்கிய நிலையில் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின்போது காலையில் வெளியான முன்னணி நிலவரங்களின்படி 46 வயதுடைய ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 146 அதிக தொகுதிகளில் அசைக்கமுடியாத அளவுக்கு முன்னிலை வகிகிறது.. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்தது . அது 25 தொகுதிகளை மட்டும் தக்கவைக்கும் என்று தெரிகிறது.

அதேபோல் 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில்  முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார்.  வெற்றிபெற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்களை கூறிக் கொண்டார். மே 30 தேதி ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker