Latestமலேசியா

உள்ளூர் கலைஞர்களைக் கெளரவித்த மீகா(MICCA) விருது நிகழ்வு !

கோலாலம்பூர், மே.23- 2019ஆம் ஆண்டுக்கான மீகா எனப்படும் மலேசிய இந்தியர் சினி விருது நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருதை  ஹரிதாஸ் வென்ற வேளையில் சிறந்த நடிகைக்கான விருதினை ஜஸ்மின் மைக்கல்  வென்றுள்ளார். 

இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்த விருது நிகழ்வு நேற்று செந்தூலில் உள்ள எச்ஜிஎச் மண்டபத்தில் நடைபெற்றது. நாட்டின் முன்னணி இந்திய திரைப்பட கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ்விருது நிகழ்வில் வாழ் நாள் சாதனையாளர்களுக்கான விருது மூத்த திரைப்பட நடிகர்கள் கேஎஸ் மணியம் , ஏகவள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படமாக பால கணபதி வில்லியம்ஸ் இயக்கத்தில் உருவான ‘ நீயும் நானும் ‘ தேர்வு செய்யப்பட்டது. இத்திரைப்படத்திற்காக பால கணபதிக்கு சிறந்த புதுமுக இயக்குனர் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிறந்த இயக்குனருக்கான விருதினை இளம் இயக்குனர் கார்த்திக் ஷாமலன் பெற்றார். சிறந்த துணை நடிகராக கானாவும் சிறந்த துணை நடிகையாக சாரா பாஸ்கினும் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து ‘ஐகோன் ஆப் தி இயர்’ விருதை பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான சி.குமரேசனும் கிரெங் ஜி அசுரனும் வென்றனர். மலேசிய இந்தியர் திரைப்பட துறையின் சிறப்பு விருதினை இயக்குனர் விமலா பெருமாள், வானொலி அறிவிப்பாளர் கீதா, டத்தின் ஶ்ரீ சைலா நாயர் ஆகியோர் பெற்றனர்.

இந்த விருது நிகழ்வில் விருது பெற்ற இதர கலைஞர்களின் பட்டியல் பின் வருமாறு :-

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker