Latestஇந்தியா

‘என் முகத்தில் விழுந்த செம அறை!”- தோல்வியை வர்ணித்த பிரகாஷ்ராஜ்

பெங்களூரு, மே.23-  மத்திய பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ்  தாம் மோசமான தோல்வியைத் தழுவி இருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார் .

“என் முகத்தில் செம அறை விழுந்திருக்கிறது” என்று அவர் தனது டிவிட்டர் செய்தியில் அவர் கூறியிருக்கிறார். பன்மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரகாஷ்ராஜ், முதல் முறையாக அரசியல் களத்தில் இறங்கிய சுயேச்சையாக போட்டியிட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பெங்களூரு தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அடுத்து மூன்றாவது இடத்திற்கு பிரகாஷ்ராஜ் தள்ளப்பட்டுள்ளார்.

தாம் வெற்றி பெற முடியாது என்பதை ஒப்புக் கொண்ட அவர்,  இருந்த போதிலும் மதச்சார்பற்ற இந்தியா என்கிற எனது கருத்தில் இருந்து நான் விலகப்போவதில்லை என்று சொன்னார்.

‘இந்தத் தோல்விக்காக நான் நிறைய அவமானப் படுவேன். அவமானப் படுத்தப் படுவேன்.  ஆனாலும் துணிந்து ஏற்பேன்’ என்று அவர் தனது ௶இவிட்டர் செய்தியில் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டப் பயணம் மிகவும் கடுமையானது தான். ஆனாலும் எனது பயணம் தொடரும் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker