Latestஇந்தியா

ஒருபுறம் தோல்வி: மறுபுறம் வெற்றி! காங். தலைவர் ராகுல் காந்தி விலகல்?

புதுடில்லி, மே. 23- தம்முடைய குடும்ப தொகுதியான அமெதி நாடாளும்னறத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியை தழுவி இருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதேவேளையில் கேரளாவிலுள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, கிட்டத்தட்ட 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் உள்ள அமெதி தொகுதியில் ராகுல் காந்தி ஏற்கனவே 4 முறை போட்டியிட்டு வென்றவர் ஆவார். ஆனால் இம்முறை அவர், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஸ்மிருதி இரானியிடம் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கிய நிலையில் இருந்தார்.

இந்நிலையில் அத்தொகுதியில் தான் தோல்வி அடையக் கூடிய நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போன நிலையில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மத்திய செயலவையுடன் அவர் கலந்து பேசவிருக்கிறார். இப்பிரச்சினையை தமக்கும் கட்சிக்கும் இடையேயான பிரச்சினையாக விட்டுவிடும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker