Latestமலேசியா

கடல் ஆமை முட்டைகளை வைத்திருந்த மாதுவுக்கு சிறை!

கூச்சிங்,மே.23- கடல் ஆமை முட்டைகளை சட்ட விரோதமாக வைத்திருந்த குற்றத்திற்காக இந்தோனேசிய மாது ஒருவருக்கு இங்குள்ள செஷன் நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டணை விதித்துள்ளது.

கடந்த மே 18ஆம் தேதியன்று இந்தோனேசிய கலிமந்தான் எல்லை பகுதியில் செரிக்கின் சந்தை அருகே உள்ள கார் நிறுத்துமிடத்தில் சரவா மாநில வனவியல் துறை அதிகாரிகள் அம்மாதினை கைது செய்துள்ளனர்.

வனவியல் அதிகாரிகள் அச்சந்தையில் சொதனை நடவடிக்கை மேற்கொண்ட போது, அம்மாது சுமார் 135 கடல் ஆமை முட்டைகளை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் விற்பனைக்காக இம்முட்டைகளை வந்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவரை கைது செய்த வனவியல் அதிகாரிகள், 1998 வன விலங்கு பாதுகாப்பு சட்டம் செக்‌ஷன் 29 (10 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று அவருக்கு நீதிமன்றம் ஒரு மாதக் காலம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இத்தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாள் தொடங்கி கணக்கிடப்படும் என  நீதிபதி முகமட் தவுபிக் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

1998 வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த கடல் ஆமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker