Latestஇந்தியா

‘சாதித்து இருக்கிறீர்கள்-‘ மோடிக்கு ரஜினி வாழ்த்து!

புதுடில்லி, மே.23- இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்று இரவு முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என்றாலும் 3 40 தொகுதிகளில் முன்னணி வகித்து வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி கூட்டணியின் வெற்றிக்கு இந்தியத் தலைவர்களும் வெளிநாட்டுத் தலைவர்களும் இப்போதே தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் மோடியின் வெற்றிக்கு தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் “மோடிஜிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள்.., கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு’ என்று தம்முடைய ட்விட்டர் செய்தியில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

மிக மோசமான அளவில் பின்னடைவை சந்தித்திருக்கும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு  மோடிக்கு தமிழில் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கு தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இந்த வெற்றிக்காக மோடியை பாராட்டி இருக்கிறார்.

மேற்குவங்கத்தில் எதிர்பாராத சரிவை எதிர்நோக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்த போதிலும் ”தோற்றவர்கள் எல்லாம் தோற்று விட்டவர்கள் அல்ல” என்றும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதே வேளையில்  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,  இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு ஆகியோர் இந்தத் தேர்தல் வெற்றிக்காக நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker