Latestமலேசியா

சூப்பில் விழுந்த தீ மூட்டி – யினால் ஏற்பட்ட விளைவு – Video

பெய்ஜிங். மே.23 – ‘ஸ்திம்போர்ட்’ உணவுக்காக அதன் சூப்பை சமைப்பதற்காக “லைட்டர்” எனப்படும் தீ மூட்டி கொண்டு அந்த அடுப்பை பற்ற வைக்க முற்பட்டபோது, அந்த தீ மூட்டி தற்செயலாக சூப்பில் விழுந்ததில், வெடித்துச் சிதறியது.

கடந்த மே 15 ஆம் தேதி, யுனான் எனும் இடத்தில் அமைந்துள்ள ஹய்டிலாவ் என்ற உணவகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அந்த காணொளியில் உணவு பரிமாறும் பெண், கொதித்துக் கொண்டிருந்த ‘சூப்’- பில் தற்செயலாக விழுந்த தீ மூட்டியை கரண்டி கொண்டு எடுக்க முயற்சிக்கும் போது, திடீரென்று வெடித்து, அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் பகுதிகளில் சிதறிக் கொட்டியது. மேலும், அந்த மேசையில் உட்கார்ந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களின் மீதும் ‘சூப்’ கொட்டியது.

அந்த சூப் சுமார் ஏறக்குறைய, 200 செல்சியஸ்  வெப்ப நிலையில் இருக்கும் என்று ‘டெய்லி மெயில்’ வெளியிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில்,  பணிப்பெண்ணின் கைகளில் ஏற்பட்ட தீக் காயங்கள் சற்று குணமடைந்து வருவதாக அந்த உணவகத்தின் அதிகாரி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker