Latestமலேசியா

டிக்கெட் இல்லாமல் பிடிப்பட்ட பயணிகளை வைத்து ஆபாச படம்! ரயில் அதிகாரி நீக்கம்!

பெர்லின்,மே.23- ஜெர்மனியில் டிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை மிரட்டி இரவு நேரத்தில் ரகசியமாக ஆபாச படம் எடுத்த பெண் அதிகாரியை பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜெர்மனியின் ரயில்வே துறையில் பணிபுரியும் தெரேசா என்கிற பெண் அதிகாரி டிக்கெட் இல்லாமல் பிடிபடும் பயணிகள் மீது ஆதிக்கம் செலுத்தி உள்ளார்.

அவர்களை மிரட்டி இரவு நேரத்தில் காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளில் நடிகர் ஒருவரின் உதவியுடன் ஆபாச படங்களை எடுத்துள்ளார்.

இந்த வீடியோ அனைத்தும் சமீபத்தில் ஒரு இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனை அடுத்து அதிரடி நடவடிக்கையாக அந்த பணிப்பெண்ணை பணி நீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் குற்றம் சார்ந்த நடத்தையை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று வலுவான வகையில் இதனை கண்டனம் செய்கிறோம். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதனை வைத்தே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker