Latestமலேசியா

தேசிய பாதுகாப்பு இலாகா வாகனங்களின் உபகாரணங்களை தருவிக்கும் திட்டத்தில் ஊழல்! – டத்தோஶ்ரீக்கு காவல் நீட்டிப்பு

புத்ரா ஜெயா,மே.20- தேசிய பாதுகாப்பு இலாகாவிற்கு சொந்தமான வாகனங்களின் உபகரணங்களை தருவிக்கும் திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டத்தோஶ்ரீ அந்தஸ்து கொண்ட நபரை மேலும் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

சுமார் 17 மில்லியன் வெள்ளியிலான அத்திட்டத்தை தமது நிறுவனம் பெருவதற்கு 39 வயதுடைய அந்நபர் லஞ்சம் வழங்கியதாக கூறப்படுகின்றது. சம்பந்தப்பட்ட அந்நபரை மலேசிய ஆணையம் கடந்த ஞயிற்றுக்கிழமை இரவு கைது செய்தது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் செக்‌ஷன் 16 (ஏ) (ஏ) இன் கீழ் வழக்கு தொடரப்பட்டு அவர் திங்கட்கிழமையன்று புத்ரா ஜெய நிதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை விசாரணை மேற்கொள்ள நான்கு நாள் தடுப்பு காவல் வழங்கியது. இந்நிலையில் அவரை மேலும் 3 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க மெஜிஸ்திரெட் நீதிபதி அதிக்கா அபு ஹசான் உத்திரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இவ்வழக்கில் இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker