Latestமலேசியா

நெகிரி செம்பிலான் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர் போட்டி !

ஶ்ரீ செண்டாயான்,மே.23- அண்மையில் இங்குள்ள பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர் போட்டியில் 20 பள்ளிகளை பிரதிநிதித்து சுமார் 66 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலா கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய உத்தமம் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய  இந்த புதிர்ப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக மாநில துணை சபா நாயகர் இரவி முனுசாமி, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அருள்குமார் ஜம்பு நாதன், வீரப்பன் சுப்பரமணியம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வில் பேசிய இரவி முனுசாமி, இந்திய மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அது அவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை உறுதிச் செய்யும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஆட்சி குழு உறுப்பினர்கள், இனி வரும் காலங்களில் இது போன்ற போட்டிகளில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனிடையே  இந்த இயக்கம் கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் உலக மாறுதல்களுக்கு ஏற்ப நுண்ணறிவை கொண்டிருக்க நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அவ்வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பம் சார்ந்த 5 போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம். அதில் புதிர் போட்டி மட்டும் முதலில் மாநில அளவில் நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில ரீதியில் தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுப்பர் என தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் இயக்குனர் கருப்பையா ஆறுமுகம் விவரித்தார். நடைபெற்ற இப்போட்டியில் முதல் 12 இடங்களை வாகை சூடிய மாணவர்கள் தேசிய அளவிலன புதிர்ப் போட்டியில் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker