Latestமலேசியா

நோன்பு நேரத்தில் உணவு: முஸ்லிம்களை பிடிக்க அதிகாரிகள் மாறுவேடம்!

சிகாமட்,மே 23- ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளாத இஸ்லாமியர்களை சிகாமாட் ஊராட்சி மன்ற அதிகாரிகள் மாறு வேடமிட்டு பிடிக்கவுள்ளனர் அதன் தலைவர் முகமட் மஸ்னி வகிமான் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சுற்று வட்டாரத்தின் 15 பகுதிகளில் ஊராட்சி மன்றத்தின் உரிமம் பெற்ற 186 உணவு தொடர்புடைய கடைகள் இயங்கி வருகின்றன. நோன்பு நேரத்தின் பொழுது இக்கடைகளில் உணவருந்தும் இஸ்லாமிய மக்களை பிடிக்க ஊராட்சி மன்றம் சிகாமட் இஸ்லாமிய சமய இலாகாவுடன் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

நோன்பு நேரத்தில் உணவருந்தும் இஸ்லாமியர்களை அடையாளம் கண்டு எங்கள் அதிகாரிகள் ரகசியமாக்க புகைப்படம் எடுப்பர். பின்னர் அந்த புகைப் படத்தின் அடிப்படையில் அவர்கள் மீது இஸ்லாமிய சமய இலாகா நடவடிக்ககை மேற்கொள்ளும்.

இந்த நடவடிக்கையில் 32  ஊராட்சி மன்ற அதிகாரிகள் மாறுவேடமிட்டு கடை பகுதிகளில் பணியில் ஈடுபடுவர். அவர்களில் சமையல் கலை தெரிந்த இருவர் அக்கடைகளில் சமயல்காரர்களாகவும் மாறுவேடமிட்டிருப்பர்.

மேலும் பார்ப்பதற்கு வெளி நாட்டினவர் போல தோற்றமளிக்கும் அதிகாரிகளை தன் இம்மாறு வேட பணிக்கு தேர்வு செய்துள்ளோம். அப்பொழுது தான் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியாது என்றும் முகமட் மஸ்னி குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker