Latestமலேசியா

பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை தற்காலிக நிறுத்தம் !

பெட்டாலிங் ஜெயா,மே.23- நாளை சிங்கப்பூர் சிறையில் நிறைவேற்றப்படவிருந்த மலேசியரான பி.பன்னீர் செல்வத்தின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சுகந்திரத்திற்கான வழக்கறிஞர் அமைப்பின் ஆலோசகர் என். சுரேந்திரன் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 51.84 கிராம் எடையிலான போதைப் பொருள் வைத்திருந்தாக சிங்கப்பூர் காவல் துறையினர் பன்னீர் செல்வத்தை கைது செய்தனர்.  மரண தண்டனை வழங்க சிங்கப்பூர் நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததை அடுத்து நாளை அவரை தூக்கிலிடவிருந்தது.

இந்நிலையில் தனது மரண தண்டனையை நிறுத்த அவர் சிறைச்சாலையில் இருந்தபடி மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு இன்று சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டை ஏற்ற நீதிமன்றம் அவரின் தூக்கு தண்டனையை ஒத்தி வைத்துள்ளது என அச்செய்தியில் தகவல் உள்ளது.

முன்னதாக பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினர் விண்ணப்பித்த முறையீட்டு மனுவை சிங்கப்பூர் அதிபர் ஹலிம யாக்கோப் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker