Latestமலேசியா

பெரும் நிதி நெருக்கடி மத்தியில் அந்நிய மாணவர்களுக்கு உதவ நிதி கிடைத்தது எப்படி ?

கோத்தா கினபாலு, மே.23- நாட்டின் அரசாங்கம் மாபெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்க பணம் கிடைத்தது எப்படி என சபா பெர்சத்து கட்சி (பிபிஎஸ்) துணை தலைவர் இ மோ சாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அரசாங்கம் தற்பொழுது பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதாக பிரதமர் துன் மகாதீர் கூறி வந்தார். இந்நிலையில் நாட்டில் உள்ள 12 உயர்க் கல்வி கூடங்களில் பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பயில உபகாரச் சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது என அவரே நேற்று அறிவித்துள்ளார். இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குகிறோம் என்றால் நாட்டின் நிதி நிலைமை சீராகதான் உள்ளது என அர்த்தப்படும். அப்படி சீராக உள்ளது என்றால் உள்நாட்டு மாணவர்களுக்கு அல்லவா முன்னுரிமை வழங்க வேண்டும்?

ஆட்சியை பிடிப்பதற்கு முன் நம்பிக்கை கூட்டணி வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக பிடிபிடிஎன் கல்வி கடன் ஒழிப்பு அம்சமும் இடம் பெற்றிருந்தது. ஆனால் ஆட்சியை பிடித்த பின் அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை. பெரும் நிதி நெருக்கடி என கோரி அந்த வாக்குறுதியை புறக்கணித்து விட்டனர். இதனால் அக்கல்வி கடன் செலுத்த வேண்டிய மாணவர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர் என அவர் விவரித்தார்.

இந்நிலையில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு நம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில உபகாரச் சம்பளம் வழங்க அரசாங்கம் முன் வந்துள்ளது எவ்விதத்திலும் ஏற்புடையதாக இல்லை.

உள்ளூர் மாணவர்களை புறக்கணித்து விட்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு அரசாங்கம் உதவுவதின் உள் நோகம் என்ன என கேள்வி எழுப்பிய இ மோ சாய், அரசாங்கம் இவ்விவகாரத்தில் உள்ளூர் மாணவர்கள் – இளைஞர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி நியாயமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker