Latestமலேசியா

மகனின் அறுவை சிகிச்சை நிதியை ஏமாற்றி விட்டனர்! மாது புகார்

ஈப்போ, மே.23- தனது மகனின் அறுவை சிகிச்சைக்காக மக்கள் வழங்கிய நன்கொடை தொகையை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி எடுத்து சென்றுள்ளது என மாது ஒருவர் புகார் வழங்கியுள்ளார்.

14 வயதுடைய எனது மகன் முதுகெலும்பு குறைபாடு காரணமாக 3 வயதிலிருந்து அவதிப்பட்டு வருகின்றான். அவனுக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பேரா மாநில தேசிய முன்ணனியின் பொது சேவை பிரிவு தலைவர் முகமட் ராவியின் துணையோடு பொதுமக்களின் உதவியை நாடினேன். அதன் அடிப்படையில் பொதுமக்களும் எனக்கு சுமார் 41,000 வெள்ளி வரை நன்கொடை வழங்கினர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி ஒரு கும்பல் என்னை தொடர்பு கொண்டனர். அவர்கள் நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மருத்துவமனையில் செலுத்த உதவி புரிவதாக என்னிடத்தில் கூறினர். அவர்கள் மிகவும் கனிவாக நடந்து கொண்டதால் நானும் பணத்தை வழங்கினேன்.

பிறகு தான் அவர்கள் என்னை ஏமாறி விட்டனர் என்பதை உணர்ந்தேன். அப்பணம் எனக்கு தற்பொழுது மிக அவசியமாக தேவைப்படுகின்றது. அதனை கொண்டு தான் நோயால் துன்புற்று வரும் என் மகனின் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

எனவே கடந்த பிப்ரவரி மாதம் இது குறித்து காவல் துறையிடம் புகார் வழங்கியுள்ளேன் என முகமட் ராவியின் அலுவலகத்தில் இவ்விவகாரம் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அம்மாது விவரித்தார்.

மேலும் நான் வேலை செய்து வருகின்றேன். அதிலிருந்து கிடைக்கும் பணத்தின் வழி தான் செலவீனங்களை மேற்கொள்கின்றேன். மக்கள் வழங்கிய பணத்தை நான் வேறு எதற்கும் செலவு செய்யவில்லை.

இவ்விவகாரத்தில் மோசடி கும்பலால் நான் ஏமாற்றப் பட்டுள்ளேன். எனது பெயரின் மீது ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைத்தெறிய வேண்டிய சூழ்நிலையில் நான் உள்ளேன் என்றும் அம்மாது குறிப்பிட்டார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பிலான காவல் துறை விசாரணையில் அம்மாதுவிற்கு தேவைப்படும் உதவிகளை தாம் வழங்குவதாக முகமட் ராவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பில் அம்மாதுவின் வாக்கு மூலத்தை பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில் விசாரணை தொடரப்படும் என ஈப்போ காவல் தலைமையக ஓசிபிடி துணை ஆணையர் முகட் அலி தம்பியும் கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker