Latestஇந்தியா

மீண்டும் பிரதமராக பதவியேற்க நாள் குறித்த மோடி!

புதுடில்லி, மே.23-  நாடாளுமன்றத் தேர்தலில் 340க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் டில்லியில் இன்று  இரவு பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பிரதமராக பதவி ஏற்க நாள் குறிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப் படுகிறார். எப்போது நடத்தலாம் என அடுத்த கட்ட வேலைகள் உற்சாகமாக இறங்கி உள்ளளர்.

இதற்கான தீவிர நடவடிக்கைகளில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் இரவுக்குள் முழுமையாக தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் புதிய அரசு பதவி ஏற்பு விழாவை நடத்தி முடிக்க திட்டமிட படுகிறது. வெற்றி பெறும் பாஜக உறுப்பினர்களை வரும் 25-ஆம் தேதி டில்லிக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

பின்னர் வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் எம்பிகள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. பாஜக உறுப்பினர்கள் கையெழுத்திடும் கடிதத்தை வைத்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோர திட்டமிட்டுள்ளார் மோடி.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker