Latestமலேசியா

வளர்ப்பு மகளைக் கற்பழித்த 65 வயது ஆடவன்!

கூச்சிங், மே.23- இங்குள்ள கம்போங் தெமெங்கொங் ஜாலான் மாதாங்கில் 65 வயதான ஆடவன் ஒருவன் 17 வயதுடைய தனது வளர்ப்பு மகளைக் கற்பழித்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது வளர்ப்புத் தந்தையின் இந்தச் செயலால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பள்ளிக்கு அடிக்கடி மட்டம் போட்டுள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் பள்ளி ஆசிரியர் அந்த ஆடவனின் மீது போலீசில் புகார் செய்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து போலீசார் சம்பந்தப்பட ஆடவனை நேற்று மாலை 4.45 மணியளவில் கைது செய்ததாக படவான் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடில் பொல்ஹசான் தெரிவித்தார்.

இதனிடையே, முதல் கட்ட விசாரணையில் அந்தப் பெண் தன்னை தனது வளர்ப்பு தந்தை கற்பழித்ததாகவும் அதனால் தான் தாம் பள்ளிக்கு வரவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அந்தக் கொடுரச் செயலை தனது வளர்ப்புத் தந்தை தன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில் செய்ததாக அந்தப் பெண் கூறினார் என்பதை ஐடில் பொல்ஹசான் உறுதிப்படுத்தினார்.

தனக்கு இந்த கொடுமை 15 வயது முதலே நடப்பதாகவும் தனது வளர்ப்பு தாயான தன் அம்மாவின் அக்காவிடம் இதைப் பற்றிக் கூறியும் அவர் அதை நம்பவில்லை என்று அப்பெண் மேலும் கூறினார் என்றார் ஐடில் பொல்ஹசான். இதற்கிடையில், அந்த ஆடவன் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டம் பிரிவு 376பி இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker