Latestமலேசியா

வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்க வில்லை – நஜிப்

கோலாலம்பூர், மே 23 – தம்மீது சுமத்தப்பட்ட கிரிமினல் குற்றசாட்டுகளை வேண்டுமென்றே இழுத்தடித்து கால தாமதத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் குறிப்பிட்டார்.

அது தம்மால் ஏற்படுத்தப்பட்ட கால தாமதம் இல்லை என்றும் அரசுத் தரப்பில் செய்யப்பட்ட தவறுகளே என அவர் குறிப்பிட்டார்.

லிம் குவான் எங்கின் நில முறைகேட்டு வழக்கு 30 மாத கால தாமதம் ஏற்பட்டதாகவும் அன்வாரின் வழக்கு 66 முறை ஒத்தி வைக்கப்பட்டதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

குவாங் எங்கின் பங்களா வீடு சந்தை விலைக்கும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட வழக்கு 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஓரினப் புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அன்வார் இப்ராஹிமிற்கு மாமன்னர் முழு மன்னிப்பை வழங்கினார்.

இதற்கிடையில், பண மோசடி, நம்பிக்கை மோசடி மற்றும் அதிகாரத்  துஷ்பிரயோகம் போன்ற வழக்குகளை நஜிப்  எதிர்நோக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நஜிப்பின் எதிர்ப்பாளர்கள், அவர் வேண்டுமென்றே வழக்குகளை தாமதப்படுத்த இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தம் மீதான வழக்குகள் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யும்படி தாம் கோரியதை முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் நஜீப் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker