Latestமலேசியா

வழிப்பறியின் போது, ஆடவரின் முகம் சிதைந்தது !

ஷா ஆலாம், மே 23, துன் தேஜா,செக்‌ஷன் 35-ன் வீடமைப்பு பகுதியில் நடந்த ஒரு வழிபறி கொள்ளையில் பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரஜை சாலையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது வழிப்பறிக் கொள்ளையர்கள் அந்த ஆடவரிடம் கொள்ளையடித்ததும் இல்லாமல்; அந்த ஆடவரின் முகத்தை சிறிய கத்தியைக் கொண்டு கிழித்துள்ளனர்.

நேற்று காலை மணி 10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 20 வயதுடைய சாயிர் அமாட் எனும் அந்த ஆடவர் தம் 2 நண்பர்களுடன் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஊள்ளுர் ஆடவர்கள் சாயிர் அமாரிடம் கைத்தொலைப்பேசியை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளனர் என ஷா ஆலாம் காவல் துறை தலைமை அதிகாரியான பாஹாருடின் மாட் தைப் கூறினார்.

கைத்தொலைப்பேசியை கொடுக்க மறுத்த சாயிர் அமாட்டுடன் கைக்கலப்பு ஏற்பட்டதால் அந்த கைக்கலப்பில் சாயிர் அமாட்டின் முகத்தை கத்தியினால் அந்த ஆடவர்கள் கிழித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, சாயிர் அமாட் முகத்தின் கீழ்பகுதியிலும் காது பகுதியிலும் வெட்டுகாயங்களுக்கு இலாக்கானதால் அவர் கிள்ளான், துங்கு அம்புவான் ராஹிமா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார் என பாஹாருடின் மாட் தைப் கூறினார்.

மேலும், சம்பந்தப்பட்ட சாயிர் அமாட்டை விசாரித்த போது தம்மிடமிருந்து கொள்ளையடித்த அந்த ஆடவர்களை அடையாளம் தெரியாது என்றும் சம்பவத்தன்று சாயிர் அமாட் முதல் நாள் அப்பகுதிக்கு வேலை செய்ய  சென்றதாகவும் தெரிய வந்தது.
சம்பவத்தில் சாய்ர் அமாட் காயமடைந்ததும் இல்லாமல் தம்முடைய 800 ரிங்கிட் மதிப்புள்ள கைப்பேசியையும் பறிகொடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகாமையிலுள்ள காவல் நிலையங்களுக்கு அல்லது ஷா ஆலாம் காவல் நிலையத்திற்கு 03-55202222 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளும் படி பாஹாருடின் மாட் தைப் பொது மக்களைக் கேட்டு கொண்டார்.
இச்சம்பவம் குறித்து செக்‌ஷன் 394 குற்றவியல் சட்டத்தின் கீழ் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் காயப்படுத்திய குற்றத்திற்காகவும் விசாரனை நடத்தப்படும் என  பாஹாருடின் மாட் தைப் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker