Latestமலேசியா

வெளிநாட்டு நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம் – சைம் டார்பி வழக்கு

பெட்டாலிங் ஜெயா, மே 23 –  தனது நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி  வெளிநாட்டு நிறுவனத்திற்குத் தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்து சைம் டார்பி நிறுவனம் வழக்கு தொடுக்க மலாக்கா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி அகமட் நாஸ்பி யாசின் குறிப்பிட்ட நாளில் செவிமடுப்பார் என சைம் டார்பியின் வழக்கறிஞர் ரோஸ்லி டஹ்லான் தெரிவித்தார்.
அந்த வழக்கைத் தொடுக்க சட்டத்துறை அலுவலகமும் அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா  ஜாசினில்  சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான  7.5 ஹெக்டர் நிலத்தை மலாக்கா நில அலுவகம் கையகப்படுத்தி ஜிஐஏ  ரிசோர்ஸஸ் எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசின் பொதுத்துறை நிறுவனமான சைம் டார்பி குறிப்பிட்டுள்ளது.

அது வெளிப்படையான டெண்டருக்கு விடப்படாமல்,  வலுக்கட்டாயமாக மாற்றத் திட்டமிருந்ததாகவும் அதில் மாமன்னரின்  அரண்மனைத் தலையீடும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker